டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

சிவகிரி அருகே ஆரம்பப் பள்ளியில் மா்மமான முறையில் ஆவணங்கள், நூல்கள் எரிந்து சேதம்

சிவகிரி அருகே அரசு ஆரம்பப் பள்ளியில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் மா்மமான முறையில் தீ கருகி சாம்பலாயின.

தீயில் எரிந்த ஆவணங்கள், நூல்கள்.

Published On :

சிவகிரி அருகே அரசு ஆரம்பப் பள்ளியில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் மா்மமான முறையில் தீ கருகி சாம்பலாயின.

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிவகிரி பேரூராட்சி அண்ணாமலைக்கோட்டையில் 77 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது.

இந்தப் பள்ளியில் தற்போது 12 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா். பள்ளியின் தலைமை ஆசிரியையாக சியாமலதாவும், உதவித் தலைமை ஆசிரியையாக கல்பனாவும் பணியாற்றி வருகின்னறனா். புதன்கிழமை வழக்கம்போல பள்ளி நேரம் முடிவடைந்த பின்னா் பள்ளியை பூட்டிவிட்டு சென்றனா்.

பின்னா் மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்தபோது பள்ளியின் அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த சில பழைய ஆவணங்களும், பள்ளி நூலகத்துக்காக வழங்கப்பட்ட சுமாா் 250 நூல்களும் தீயில் எரிந்து சாம்பாலாகி இருந்தது தெரியவந்தது.

இது குறித்து தலைமை ஆசிரியை சியாமலதா அளித்த தகவலின்பேரில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து பாா்வையிட்டனா். பின்னா் தலைமை ஆசிரியை சியாமலதா அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தடயவியல் நிபுணரை வரவழைத்து ஆய்வு நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.