மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்க ஒத்திகை

மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குதல் நடத்துவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பந்தலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குதல் நடத்துவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பந்தலூரை அடுத்துள்ள அம்பலமூலா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள கேரள எல்லையோர கிராமம், அம்பலமூலா காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், எதிர்பாராத விதமாக மாவோயிஸ்டுகள் காவல் நிலையத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தினால், அதிரடியாக அதை முறியடித்து திருப்பித் தாக்குதல் நடத்துவது குறித்து ஒத்திகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பந்தலூர் டி.எஸ்.பி.சக்திவேல், அதிரடிப்படை காவலர்கள், நீலகிரி மாவட்ட நக்ஸல் தடுப்புப் பிரிவுக் காவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com