கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தேயிலை வாரிய அலுவலர்கள் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர், தேவாலா, நாடுகாணி ஆகிய பகுதிகளில் உள்ள டீ கடைகள், பேக்கரிகள், தேயிலைத் தூள் விற்பனை செய்யும் கடைகளில் தேயிலை வாரிய அலுவலர்கள் திடீரென நுழைந்து வாடிக்கையாளர்களுக்கு தேனீர் தயாரிக்கும் டீ தூளை எடுத்து நீரில் கலந்து சோதித்துப் பார்த்தனர்.
அதேபோல் தேயிலைத் தூள் விற்பனை செய்யும் கடைகளிலும் மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர்.
தேயிலை பிளண்ட் செய்யும் கடைகளில் நிறம் கலந்திருப்பதை அறிந்த அலுவலர்கள், முதல்முறையாக சோதனை நடத்துவதால் விற்பனையாளர்களை எச்சரித்தனர்.
மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
கூடலூர் தேயிலை வாரிய மண்ட அலுவலகத்தைச் சேர்ந்த உதவி இயக்குநர் சி.கே.ரமேஷ் தலைமையில் வளர்ச்சி அலுவலர் வருண் மேனன், தேயிலைத் தொழிற்சாலைகளுக்கான ஆலோசனை அலுவலர் சுனில்குமார், வளர்ச்சி அலுவலர் அஞ்சலி ஆகியோர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அனைத்துப் பகுதியிலும் சோதனை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








