அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோத்தகிரியில் காட்டு எருமைகள் நடமாட்டம்: விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கேத்தரீன் நீர்வீழ்ச்சி சாலை,  மூணுரோடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டு எருமைகள் நடமாட்டம் இருப்பதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:38 am

DIN

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கேத்தரீன் நீர்வீழ்ச்சி சாலை,  மூணுரோடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காட்டு எருமைகள் நடமாட்டம் இருப்பதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். 
கோத்தகிரி கேத்தரீன் சாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு எருமைகள் கூட்டமாக வந்து மேய்கின்றன. இதனால், தேயிலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறிப்பது, தோட்டப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக குட்டிகளுடன் சுமார் 200-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள், மூணுரோடு சாலை ஓரத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து வெளியேறாமல் அங்கேயே  உள்ளன. இதனால், நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சாலையைக் கடந்து செல்ல அஞ்சுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில்  காட்டு எருமைகள் சாலையிலேயே படுத்துவிடுவதால், வாகனங்களில் வருவோருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.  எனவே,  காட்டு எருமைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டவனத் துறையினர் நடவடிக்கை எடுக் வேண்டும் என  பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.