பந்தலூர் வனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட காட்டுத் தீயால், பல ஏக்கர் பரப்பிலான காடும் புல்வெளியும் எரிந்து சாம்பலானது.
தற்போது கூடலூர் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக காடுகள் காய்ந்து காணப்படுவதால், எளிதில் தீப்பிடிக்கத் துவங்கியுள்ளன.
கூடலூர் வனக்கோட்டத்திலுள்ள பந்தலூர் வனப்பகுதியில் ரிச்மண்ட் அருகே ஏற்பட்ட காட்டுத் தீ இரவு வரை எரிந்து, தானாகவே அணைந்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள காடுகள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.