பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை தேசிய கருத்தரங்கம்

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பொருளியல் துறை  சார்பில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் செவ்வாய், புகன்கிழமைகளில் நடைபெற்றது.  
Updated on
1 min read

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பொருளியல் துறை  சார்பில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் செவ்வாய், புகன்கிழமைகளில் நடைபெற்றது.  
இந்தக் கருத்தரங்கம்   "உணவுப் பாதுகாப்பு,  சமூகப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைகள்-  பிரச்னைகளும் சவால்களும்' என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி செயலர் சகோதரி அசும்தா தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் சகோதரி ஷீலா வாழ்த்துரை வழங்கினார். 
கருத்தரங்கம் குறித்து  பொருளியல் துறைத் தலைவரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான ஹேமா ஸ்ரீகுமார் விளக்கினார். முதல் நாள் கருத்தரங்கில் பெங்களூர் பல்கலைக்கழக பேராசியர் கேசவ்  உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்வாதாரங்கள் குறித்துப் பேசினார். 
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில்,  பொருளியல் துறை நிபுணர்கள் சங்க முன்னாள் செயலர் மற்றும் தலைவர் சூரியகுமார் "பட்ஜெட் 2017-18" குறித்து மாணவர்களிடையே பேசினார். 
சென்னை லயோலா கல்லூரி துணைப் பேராசிரியர் மாரியப்பன்,  உணவுப் பாதுகாப்பும் சமூகப் பொறுப்பும் குறித்துப் பேசினார்.  கோவை பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியர் நாகராஜன், பொருளாதார வளர்ச்சியிலும் கல்வி வளர்ச்சியிலும் 2017-18 பட்ஜெட் தாக்கம் குறித்து உரையாற்றினார். 
நிறைவு விழாவில், நீலகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போதைக் கட்டுப்பாட்டு அலுவலர் கருணாநிதி,  உணவுக் கலப்படம் குறித்துப் பேசினார். பொருளியல் துறைப் பேராசிரியர்  ஜீவா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com