கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நிலப் பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள பிரிவு-17,53 உள்ளிட்ட அனைத்து கைவச பூமிகளுக்கும் பட்டா வழங்கவேண்டும். பிரிவு -17 நிலங்களில் குடியிப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்கவேண்டும்.
ஓவேலி பகுதியில் அடிப்படை வசதிகளை செயல்படுத்த விடாமல் தடுத்துவரும் வனம், வருவாய்த் துறை அலுவலர்களை கண்டித்தும், வனப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், வன உரிமை அங்கீகாரச் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், டான் டீ தேயிலைக் கோட்டத்தில் தொழிற்சாலைகள் மூடி வருதைக் கண்டித்தும், டான் டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாகச் சென்று புதிய பேருந்து நிலையம், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக காந்தித்திடலைச் சென்றடைந்தனர்.
தொடர்ந்து, கே.பேபி நினைவரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு மாநில கமிட்டி உறுப்பினர் கே.பி.முகமது தலைமை வகித்தார். மாநில கமிட்டி உறுப்பினர் கோஷி பேபி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சிறப்புரையாற்றினார். உதகை சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ் மற்றும் மாவட்ட, நகர, தாலுகா கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மிளா வேட்டையாடி சமூக வலைதளத்தில் பகிா்ந்த இளைஞா் கைது
ஊத்தங்கரை அருகே ஆசிரியா் வீட்டில் 5 பவுன் தங்க நகை திருட்டு

நாகை - காங்கேசன் துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மூன்றாம் ஆண்டு தொடக்கம்




