4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குன்னூரில் தூய்மைப் பணி

குன்னூரில் பிளாகிங் - இந்தியா' என்ற பெயரில் தூய்மை பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

Updated On :21 மே 2018, 7:15 pm

குன்னூரில் பிளாகிங் - இந்தியா' என்ற பெயரில் தூய்மை பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
பெங்களூருவைச் சேர்ந்த பிளாகிங் குழு சார்பில் நடைபயிற்சியின் போது தூய்மை பணிகளையும் மேற்கொள்ளும் பணிகள் நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெங்களூருவைச் சேர்ந்த குழுவின் தலைவர் ஜேக்கப் செரியன் தலைமையில், கிளீன் குன்னுôர் அமைப்புடன் இணைந்து குன்னூர் சிம்ஸ்பார்க் முதல் பெட்போர்டு வரையில் இந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நடைபயிற்சியுடன் கூடிய தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். இதன் பின் கோத்தகிரியிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறிகையில், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போதே ஆங்காங்கே இருக்கும் குப்பைகளை அகற்றுவதால், தெருக்கள் தூய்மையாவதுடன் அவர்களுக்கு அது உடற்பயிற்சி மேற்கொள்வதாகவும் உள்ளது. இதை நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.