
புதிய விளையாட்டு விதிகள் தொடர்பாக உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் உதகையில் 3 நாள்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த சிறந்த வல்லுநர்கள் மூலமாக செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு இருப்பிடப் பயிற்சிஅளிக்கப்படுகிறது.
உதகையிலுள்ள அண்ணா உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி முகாமில் ஜிம்னாஸ்டிக்ஸ், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, சதுரங்கம், சாலை சைக்கிள், கடற்கரை கையுந்துப் பந்து, கேரம், வளைபந்து, ஜூடோ மற்றும் பிற விளையாட்டுகளுக்கான புதிய விதிமுறைகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும். இதில், நீலகிரி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்ற உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





