100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

கோத்தகிரியில் நூலக கட்டட மேற்கூரையில் விரிசல்: செப்பனிடக் கோரிக்கை

கோத்தகிரியில் காந்தி மைதானம் அருகில் உள்ள நூலகக் கட்டடத்தின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள விரிசலை உடனடியாக

Published On :

கோத்தகிரியில் காந்தி மைதானம் அருகில் உள்ள நூலகக் கட்டடத்தின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள விரிசலை உடனடியாக செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் பேரூராட்சி  நிர்வாகத்திற்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.
  கோத்தகிரி நகரின் மையப் பகுதியான காந்தி மைதானம் அருகில் கிளை நூலகம்  உள்ளது. கிளை நூலகத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்  ரூ. 40 லட்சம் செலவில் 2 தளங்களுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டது. பொது நூலகத் துறை மற்றும் நீலகிரி மாவட்ட நூலக ஆணைக் குழு ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இதில், தற்போது வரை 15 ஆயிரத்து 800 பேர்  உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 300க்கும் மேற்பட்ட வாசகர்கள் நூலகத்துக்கு வருகின்றனர். மேலும், புரவலர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ள வாசகர் வட்டம் சார்பில் நூலக வார விழா,  புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  இந்நிலையில்,  சூரிய வெளிச்சம் கிடைப்பதற்காக நூலகத்தின் மேற்கூரையில் பிரமிடு வடிவில் பிளாஸ்டிக் சீட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மீது அருகிலுள்ள கற்பூர மரங்களின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுகின்றன. இதனால், அந்த இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அதன் வழியாக மழைநீர் கட்டடத்துக்குள் புகுந்து நூலகத்துக்குள் வழிந்தோடுகிறது. இதனால் வாசகர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, நூலகக் கட்டடத்தின் மேற்கூரையை உடனடியாக சீரமைக்க பேரூராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.