கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் 30 ஏழைப் பெண்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூர் பகுதியிலுள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் ஏழைப் பெண்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 30 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், பயனாளிக்கு மூன்று பெண் ஆடுகள், ஒரு ஆண் ஆடு என தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டன. பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் ஆடுகளை வழங்கினார்.
உதவி இயக்குநர் டாக்டர் மெய்யநாதன் மேற்பார்வையில் ஓவேலி கால்நடை மருத்துவர் எஸ்.பாரத்ஜோதி, நெலாக்கோட்டை கால்நடை மருத்துவர் நந்தினி, சேரம்பாடி கால்நடை மருத்துவர் ஜீவா, அய்யன்கொல்லி கால்நடை மருத்துவர் ரேவதி, டாக்டர் டேவிட் மோகன், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








