உதகையில் அகில இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மாநாடு இம்மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணிவண்ணன் கூறியதாவது:
இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 28ஆவது அகில இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மாநாடு உதகையில் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 31ஆம் தேதி நடைபெறும் இதன் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார். 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, நீர்வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








