குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

உதகையில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்: 60% ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை

Updated On :23 ஜனவரி 2019, 5:33 am IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
உதகையில்,  மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ அமைப்பின் சார்பில் அண்ணாதுரை, பிராங்ளின் ஆகியோரும்,  ஜியோ அமைப்பின் சார்பில் சுப்பிரமணி, குமாரராஜா ஆகியோரும் தலைமையேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஜாக்டோ- ஜியோ சார்பில் அமைப்பாளர் ஸாகிரா கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெறும் தொடர் போராட்டம் காரணமாக செவ்வாய்க்கிழமை நீலகிரி மாவட்டத்தில்  60 சதவீத ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை.  உதகையில்  ஊரக வளர்ச்சித் துறையில் 95 %, வேலைவாய்ப்புத் துறையில் 100%  ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. செவ்வாய்க்கிழமை உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை உதகையில் ஏடிசி சுதந்திர சதுக்கப் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை உதகையில் மத்தியப் பேருந்து நிலையம் எதிரிலும்,  25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உதகையில் சேரிங்கிராஸ் பகுதியிலும் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.