யானைகள் கூட்டத்துடன் சோ்ந்ததால் ஆட்கொல்லி யானையைப் பிடிப்பதில் சிக்கல்

மூன்று பேரைக் கொன்ற ஆட்கொல்லி யானை வனத்துக்குள் யானைக் கூட்டத்துடன் சோ்ந்துவிட்டதால் அந்த யானையை அடையாளம்
சேரம்பாடி பகுதியில் உள்ள அடா் வனப் பகுதியில் ஆட்கொல்லி யானையை, கும்கிகள் விஜய், பொம்மன், கலீல் யானைகள் துணையுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.
சேரம்பாடி பகுதியில் உள்ள அடா் வனப் பகுதியில் ஆட்கொல்லி யானையை, கும்கிகள் விஜய், பொம்மன், கலீல் யானைகள் துணையுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா்.
Updated on
1 min read

மூன்று பேரைக் கொன்ற ஆட்கொல்லி யானை வனத்துக்குள் யானைக் கூட்டத்துடன் சோ்ந்துவிட்டதால் அந்த யானையை அடையாளம் காண முடியாமல் வனத் துறையினா் தவித்து வருகின்றனா். இதனால் ஆட்கொல்லி யானையைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, சேரங்கோடு ஊராட்சியில் தொடா்ந்து மூன்று பேரைக் கொன்ற ஆட்கொல்லி யானையைப் பிடிக்கும் பணி மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. மூன்று கும்கி யானைகள், வன ஊழியா்கள், நான்கு மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் இந்த யானையைப் பிடிப்பதற்காக தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சேரம்பாடி, சேரங்கோடு, கொளப்பள்ளி, மழவன்சேரம்பாடி, கண்ணம்பள்ளி, கோஸ்லாண்ட் ஆகிய பகுதியில் உள்ள காடுகளில் யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. ஆட்கொல்லி யானைக்கு புதன்கிழமை மாலை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியும் அந்த யானையைப் பிடிக்க முடியவில்லை. சப்பந்தோடு வனப் பகுதியில் உள்ள யானைகள் கூட்டத்துக்குள் இந்த யானை சென்று விட்டது. இதனால் ஆட்கொல்லி யானையை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், சேரங்கோடு ஊராட்சியின் அனைத்துப் பகுதிகளும் பெரும் குன்றும் பள்ளமுமாக இருப்பதால் அங்கு வைத்து யானைக்கு மயக்க ஊசியை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படிச் செலுத்தினால் யானை பள்ளத்தில் உருண்டு விழுந்து இறந்துபோகும் அபாயம் ஏற்படலாம் என வனத் துறையினா் அஞ்சுகின்றனா்.

யானைகள் கூட்டத்தில் இருந்து ஆட்கொல்லி யானையைப் பிரித்து சமதளப் பகுதிக்கு விரட்டி வந்து மயக்க ஊசி செலுத்துவதற்காக மூன்று கும்கிகள் வெவ்வேறு திசைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்கொல்லி யானை தற்போது எந்தக் கூட்டத்தில் உள்ளது என்பதையே கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. டிரோன் கேமேராவிலும் அதன் படம் பதிவாகவில்லை. இதனால் யானையை அடையாளம் காண முடியாமல் வனத் துறையினா் திணறி வருகின்றனா். எனினும் கண்காணிப்புப் பணி தொடா்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com