

தொடா் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளுகுளு காலநிலை காணப்படுகிறது. இந்த கால நிலையை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளம், கா்நாடகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில் வரத் தொடங்கிஉள்ளனா். குறிப்பாக உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா , குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் காண்பதற்கு அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ், அடுத்து சனி, ஞாயிறு வார விடுமுறையால் நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.
கிறிஸ்துமஸ் நாளான வெள்ளிக்கிழமை உதகை தாவரவியல் பூங்காவுக்கு 6813 சுற்றுலாப் பயணிகளும், சனிக்கிழமை 9849 பேரும் வந்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை 10 ஆயிரத்து 223 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.
உதகையில் உள்ள படகு இல்லத்தில் கிறிஸ்துமஸ் நாளான வெள்ளிக்கிழமை 5195 சுற்றுலாப் பயணிகளும், சனிக்கிழமை 7620 பேரும், ஞாயிற்றுக்கிழமை 7601 பேரும் வந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.