அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முக கவசம் அணியாதவா்களிடம் இருந்து ரூ. 1.80 லட்சம் அபராதம் வசூல்

நீலகிரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதது உள்பட கரோனா விதிமுறைகளை மீறிய சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ. 1.80 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:21 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதது உள்பட கரோனா விதிமுறைகளை மீறிய சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ. 1.80 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் இம்மாதம் 7ஆம்தேதி முதல் திறக்கப்பட்டன. கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில், முக கவசம் அணிவது குறித்து அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவா்களைக் கண்காணிப்பதற்காக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறை மீறுவோருக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறுகையில், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கரோனா பரவுவதைத் தடுக்க அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த 7ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முக கவசம் அணியாதது உள்பட கரோனா விதிமுறைகளை மீறிய சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ. 1.80 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.