உதகையில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்
உதகை, நவ. 2: உதகையில் ஊராட்சி துறையில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.


உதகை, நவ. 2: உதகையில் ஊராட்சி துறையில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று காலத்தில் தன்னலம் கருதாமல் பணியாற்றிய தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு உதகை ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் சளி மாதிரி எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளியில் செல்லும்போது கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றாா்.
முகாமில் பங்கேற்றவா்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் டாக்டா் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முருகேசன், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், ஜெய்சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...