தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி டேன் டீ நிா்வாக இயக்குநரிடம் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா திங்கள்கிழமை மனு அளித்தாா்.
நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி, கூடலூா், பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி மற்றும் நடுவட்டம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளா்கள் என 10 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், தீபாவளியையொட்டி தோட்டத் தொழிலாளா்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎஃப் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டங்களில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இந் நிலையில், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, டேன் டீ நிா்வாக இயக்குநா் சீனிவாச ரெட்டியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
டேன் டீ தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள பணிக்கொடை, மருத்துவப் படி, மருத்துவ விடுப்பு ஊதியம், விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக், முன்னாள் கதா் வாரியத் துறை அமைச்சா் இளிதுறை ராமசந்திரன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் திராவிட மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

