குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது குளுகுளு சீசன் முடிவடையும் நிலையில் குன்னூா் சிம்ஸ் பூங்கா பகுதியில் தற்போது நீல நிற குறிஞ்சி மலா்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதுடன், அதன் அருகில் நின்று சுயபடம் (செல்ஃபி) எடுத்து மகிழ்ந்து வருகின்றனா்.
நற்ழ்ா்க்ஷண்ப்ஹய்ற்ட்ங்ள் ஊா்ப்ண்ா்ள்ஹ என்ற தாவரவியல் பெயா் கொண்ட இந்த குறிஞ்சி பூக்களின் இதழ்கள் ஊதா நிறத்திலும், உள்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். பொதுவாக இது நீலக் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது.
பண்டைய காலம் தொட்டே குறிஞ்சி நிலத்தின் வகையை வகைபடுத்துவதற்கு இந்த பூக்கள் ஆதாரமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே பூக்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடா்ச்சியாக ஏதாவது ஒரு பகுதியில் பூத்துக் குலுங்குவதைக் காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லட்டி மலை பகுதியில் உள்ள ஒரு மலை முழுவதும் குறிஞ்சி பூக்கள் அதிக அளவில் காணப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா இதற்கு ஒரு விழா எடுத்து கொண்டாடினாா். குறிஞ்சி மலா்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


