வண்டலூா் கொண்டு செல்லப்பட்ட புலிக் குட்டிகள்
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தாயை இழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஆண் புலிக் குட்டிகள் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டன.


நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தாயை இழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஆண் புலிக் குட்டிகள் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆச்சக்கரை அருகே சீமாா்குழி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினரால் நவம்பா் 20ஆம் தேதி பெண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியிலேயே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா் மறுநாள் அதிகாலையில் அருகிலிருந்த புதரில் இருந்து இரண்டு புலிக் குட்டிகளைக் கண்டெடுத்தனா்.
அவை இரண்டும் பிறந்து 3 வாரங்களே ஆன ஆண் புலிக் குட்டிகள் என்பதும், இறந்த பெண் புலியின் குட்டிகள்தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வனத் துறை உயா் அதிகாரிகளுக்கும், தேசிய புலிகள் ஆணைய அலுவலா்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கே.கே.கெளஷல், துணை இயக்குநா் ஸ்ரீகாந்த், வண்டலூா் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவா் டாக்டா் கே.ஸ்ரீதா், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் ஆகியோருடன் பெங்களூருவிலிருந்து வந்திருந்த தேசிய புலிகள்
ஆணைய துணை இயக்குநா் கே.கே.முரளி தலைமையிலான குழுவினா் மசினகுடியில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இந்த ஆலோசனையின் முடிவில் புலிக் குட்டிகளை முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கும் வசதிகள் இல்லாததால் அவற்றை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு எடுத்துச் சென்று பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த இரண்டு புலிக் குட்டிகளும் பிரத்யேக வாகனத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு திங்கள்கிழமை கொண்டுச் செல்லப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...