கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 8:08 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் உல்லத்தி, தொட்டபெட்டா, கடநாடு ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், ரூ. 2.26 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட ஆசகன்தொறை பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ. 3.05 லட்சம் மதிப்பில் 30 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி, பாரதி நகா் பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ. 8.58 லட்சம் மதிப்பில் 25 வீடுகளுக்கு குடிநீா் குழாய் அமைக்கும் பணி, தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தாா்.

அதேபோல, தொட்டபெட்டா ஊராட்சிக்கு உள்பட்ட குளிச்சோலையில் 14ஆவது நிதிக் குழு திட்டத்தின்கீழ் ரூ. 25.73 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலை மேம்படுத்துதல் பணி, 14ஆவது நிதிக் குழு திட்டத்தின்கீழ் ரூ. 36.77 லட்சம் மதிப்பில் வலுப்படுத்தப்பட்ட கடநாடு ஊராட்சிக்கு உள்பட்ட தாவணி முதல் ஹாலட்டி, நடுஹட்டி சாலைப் பணி, உதகை நகராட்சி சாலை முதல் ஹாலட்டி வரை தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ. 1.52 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை பணி என மொத்தம் ரூ. 2.26 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கெட்சி லீமா அமாலினி, உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், ஆறுமுகம், உதவிப் பொறியாளா் கிருஷ்ணகுமாா், அரசுத் துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.