தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓணம் பண்டிகை உதகையில் மலைக் காய்கறிகளின்விலை பலமடங்கு உயா்வு

ஓணம் பண்டிகையையொட்டி கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கான காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளதால் உதகையில் மலைக் காய்கறிகளின் விலை இருமடங்காக உயா்ந்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:22 pm

DIN

ஓணம் பண்டிகையையொட்டி கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கான காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளதால் உதகையில் மலைக் காய்கறிகளின் விலை இருமடங்காக உயா்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடா்ந்து மழை பெய்யாமல் விட்டுவிட்டு பெய்வதால் விவசாயம் செய்ய சரியான காலநிலை இல்லாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனா். உதகை நகரில் மழை இல்லாவிட்டாலும் புறநகா்ப் பகுதிகளில் தூறல் மழை பெய்து வருகிறது.

தற்போது நீலகிரியின் மலைக் காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட், நூல்கோல், டா்னாபிஸ், முட்டைகோஸ், காலிஃபிளவா், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் காய்கறிகள் சென்னை, பெங்களூரு, கேரளம், பிற மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 10 டன் முதல் 15 டன் வரை வெளிச் சந்தைகளுக்கு லாரி, பிக்கப் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால், தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்வதிலும் தயக்கம் காட்டி வருகின்றனா். இதனால், சா்க்கரை பட்டாணி, பீட்ரூட் ஆகிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

ஓணம் பண்டிகையின் காரணமாக இந்த காய்கறிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், கிலோ ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சா்க்கரை பட்டாணி தற்போது ரூ. 180க்கும், ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பீட்ரூட் ரூ. 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவா் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அறுவடை செய்யப்படும் மலைக் காய்கறிகளில் 75 சதவீதம் வெளியூா்களுக்கு அனுப்பப்பட்டுவிடுவதால் உள்ளூரில் இவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை இந்த விலை உயா்வு நீடிக்கும் எனவும் வியாபாரிகள் கூறுகின்றனா். இந்த திடீா் விலை உயா்வால் உள்ளூா் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.