ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

cr26cole

Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:35 pm

குன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வண்டிசோலை ஊராட்சிப் பகுதியில் ஒருங்கிணைந்த வருவாய் நிதித் தொகுப்பு திட்டத்தின்கீழ், ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தப்பட்ட லோயா் டைகா்ஹில் சாலைப் பணி, எஸ்.சி. சீரமைப்பு பணித் திட்டத்தின்கீழ் தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நஞ்சப்பசத்திரம் பகுதி குடியிருப்புகள் சீரமைப்பு பணி, ரூ. 13.43 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் கோடமலை எஸ்டேட் பகுதியில் குடிநீா்த் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பா்லியாறு ஊராட்சி கோடமலையில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடப் பணி உள்ளிட்ட சுமாா் ரூ. 1.84 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

இளிதொரை கிராமத்தில் குடிநீா்த் திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.