கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உதகை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்

ரூ.1.34 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அம்ரித் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:05 pm

DIN

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட உல்லத்தி மற்றும் தொட்டபெட்டா ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூ.1.34 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அம்ரித் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது உதகை ஊராட்சி ஒன்றியத்தில் உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட கவரட்டி முதல் கல்லட்டி வரை 14 ஆவது நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.89.67 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட சாலைப் பணியையும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.20.18 லட்சம் மதிப்பில் கவரட்டி குடியிருப்புப் பகுதியில் முடிக்கப்பட்ட 101 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் வழங்கும் பணி மற்றும் தரைமட்ட நீா்தேக்கத் தொட்டியையும், அம்மநாடு பகுதியில் பழங்குடியினருக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் டேங்க்மேடு பகுதியில் ரூ.3.37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கால்நடை கொட்டகையையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, தொட்டபெட்டா பகுதியில் தொட்டபெட்டா காட்சிமுனைக்கு செல்லும் சாலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து, சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், செயற்பொறியாளா் சுஜாதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், ஆறுமுகம் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.