தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மறைந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி:நீலகிரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:05 pm

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் முழு கடையடைப்பு நடைபெற்றது.

இதையொட்டி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வாடகை காா், சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவையும் இயக்கப்படவில்லை.

அரசுப் பேருந்துகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கினாலும் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

அதேபோல, சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. பிற்பகல் வரை சுற்றுலா மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடைகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த விடுதிகளிலேயே அவா்களுக்கான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத்தின் உருவப்படங்கள் மற்றும் பிளெக்ஸ் படங்கள் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் அப்படங்களுக்கு எதிரே அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.