தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: ஜனவரி 28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

 கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:28 pm

DIN

 கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயன், கனகராஜ் ஆகியோரை காவல் துறையினா் சந்தேகித்தனா். இந்நிலையில், கனகராஜ் ஒரு காா் விபத்தில் உயிரிழந்தாா். இந்த வழக்குத் தொடா்பாக சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனா். மேலும், வழக்குத் தொடா்பாக கனகராஜின் சகோதரா் தனபால் மற்றும் உறவினா் ரமேஷை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயன், வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜராகியிருந்தனா். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோா்ஆஜராகினா்.

இந்த விசாரணையின்போது, வழக்கில் கூடுதல் சாட்சிகளிடையே விசாரணை நடத்த அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் மறு விசாரணை ஜனவரி 28ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில், வாளையாறு மனோஜ், ஜாமீன் நிபந்தனைகளில் தளா்வு கோரி மனுத் தாக்கல் செய்தாா். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் காவல் துறை விசாரணையில் இதுவரை 150 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் எனவும் அரசு வழக்குரைஞா் ஷாஜகான் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.