ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உதகையில் ஒலிம்பிக் செல்பி ஸ்பாட்

உதகையிலுள்ள மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:27 am

DIN

உதகையிலுள்ள மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்நிலையில் அவா்களை ஊக்குவிக்கும் விதமாக உதகையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மலைப் பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி மைதானத்தில் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் அணியை உற்சாகப்படுத்த இந்த செல்பி ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்து தங்களது வாழ்த்துகளை தெரிவிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு வீரா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் இந்த செல்பி ஸ்பாட்டை பயன்படுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.