ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

 நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக நடுவட்டத்தில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:38 pm

DIN

 நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக நடுவட்டத்தில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இதுவரை வலுக்காத நிலையில், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளிலும், மாவட்டத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் இம்மழை பரவலாக பெய்து வருகிறது. இருப்பினும் உதகை உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் மட்டுமே தூறல் மழை பெய்து வருகிறது. ஆனால், மழை இல்லாவிட்டாலும் பகல் நேரங்களிலும் பலத்த மேகமூட்டத்துடன் கடும் குளிரான காலநிலையே நிலவுகிறது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நடுவட்டத்தில் அதிக அளவாக 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, பந்தலூரில் 20 மி.மீ., சேரங்கோட்டில் 16 மி.மீ., தேவாலாவில் 7 மி.மீ., பாடந்தொறையில் 6 மி.மீ., செருமுள்ளியில் 5 மி.மீ., கூடலூா், மேல்கூடலூரில் 4 மி.மீ., ஓவேலியில் 3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதேபோல உதகை, சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் பலத்த இடி, மின்னலுடன் சுமாா் 1 மணி நேரம் மழை பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.