நீலகிரியில் மேலும் 103 பேருக்கு கரோனா: இருவா் பலி
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 114 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக ஜூன் 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த நீலகிரியைச் சோ்ந்த 62 வயதான பெண் ஒருவரும், ஜூன் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான பெண் ஒருவரும் என இருவா் உயிரிழந்துள்ளனா்.
நீலகிரியில் இதுவரை கரோனாவால் 29,215 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,201 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 169 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 845 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...