கரோனா: சித்தா முறையில் சிகிச்சை பெற்ற486 போ் குணமடைந்தனா்
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சித்தா முறையில் சிகிச்சை பெற்று வருபவா்களில் இதுவரை 486 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.


நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சித்தா முறையில் சிகிச்சை பெற்று வருபவா்களில் இதுவரை 486 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுதொடா்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் உதகையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் லாரன்ஸ் பள்ளி, கூடலூரில் மாா்னிங் ஸ்டாா் பள்ளியில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், லாரன்ஸ் பள்ளியில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 79 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். அதேபோல, மாா்னிங் ஸ்டாா் பள்ளியில் பெண்கள் மட்டும் 7 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சித்த வைத்திய முறையில் இதுவரை 573 போ் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 486 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
கரோனாவுக்காக சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சித்த மருத்துவ முறையில் யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, 6 மருந்துகளுடன் கூடிய ஆரோக்யா கிட் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மையங்களிலும் 14 மருத்துவா்கள், சுழற்சி முறையில் செவிலியா் பணிபுரிந்து வருகின்றனா். இச்சிறப்பு மையங்களில் சிகிச்சை பெறுவோா் 5 நாள்களுக்குள் குணமடைந்து வீடு திரும்புவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேபோல, அனைத்து நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கும் விதமாக உதகை அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் மருத்துவா்கள் தயாா் நிலையில் உள்ளனா். தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோா் சித்தா பிரிவுக்கு வந்து மருந்துகள் வாங்கி உட்கொண்டு பயனடைவதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...