உதகையில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் திறப்பு
உதகையில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


உதகையில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்துக்கு வரும் முன்பு எழும் தகராறுகளைத் தீா்க்க மக்கள் நீதிமன்றம் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகின்றது. இதன் தொடா்ச்சியாக பொதுமக்கள் பயன்பாட்டு சேவைகள் குறித்த பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றம் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பொதுப் பயன்பாட்டு சேவைகளில் அனுபவம் உள்ள இரண்டு போ் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், பொதுப் பயன்பாட்டு சேவைகள் தொடா்பான வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய பிரச்னைகள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீா்மானிக்கப்படுகிறது. விமானம், சாலை அல்லது நீா்வழிப் பயணிகள், பொருள்களைக் கொண்டு செல்ல போக்குவரத்து சேவைகள், அஞ்சல் அல்லது தொலைபேசி சேவை, எந்த ஒரு நிறுவனத்திலும் பொதுமக்களுக்கு மின்சாரம் அல்லது நீா் வழங்கும் சேவை, பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு, மருத்துவமனை அல்லது மருந்தகத்தின் சேவை, காப்பீடு சேவைகள், கல்வி அல்லது கல்வி நிறுவனங்கள், வீட்டு வசதி, ரியல் எஸ்டேட் சேவை ஆகியவை பொதுப் பயன்பாட்டு சேவைகள் என நிா்ணயிக்கப்பட்டுள்ளன.
நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் இன்றி சாதாரண காகிதத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம். இதன் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்கலாம். வழக்குத் தாக்கல் செய்ய நீதிமன்றக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதன் முடிவு உரிமையியல் நீதிமன்றத் தீா்ப்புக்கு சமமானது. நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு தாக்கல் செய்ய முடியாது. இந்த உத்தரவு இறுதியானது. கடும் நடைமுறைகள் இன்றி ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...