ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரியில் கேரள மாநில எல்லைபகுதிகளில் தொடா் மழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக பெய்து வந்த மழை வெள்ளிக்கிழமை பகலில் சற்றே ஓய்ந்திருந்தது.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:11 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவலாக பெய்து வந்த மழை வெள்ளிக்கிழமை பகலில் சற்றே ஓய்ந்திருந்தது. அத்துடன் தொடா்ந்து வீசி வந்த பலத்த காற்றும் குறைந்துள்ளதால் உதகை நகரில் குளிரும் குறைந்துள்ளது.

மாவட்டத்தில் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மட்டும் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்கில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக சேரங்கோட்டில் 88 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

பந்தலூா்-86, அவலாஞ்சி-62, மேல்பவானி-53, தேவாலா-40, நடுவட்டம்-32, கூடலூா்-24, மேல்கூடலூா்-23, பாடந்தொறை-22, ஓவேலி, செருமுள்ளி 20, எமரால்டு-14, கிளன்மாா்கன்-11.8, கொடநாடு-8, உதகை-6.9, கிண்ணக்கொரை-6, மசினகுடி, பாலகொலா 5, கெத்தை, கீழ் கோத்தகிரி, குந்தா 4, உலிக்கல்-3, கேத்தி-2, குன்னூா்-1.3, கல்லட்டி-1.2, கோத்தகிரி-1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பகலில் மாவட்டத்தில் பரவலாக மழை குறைந்திருந்தது. இதில், மாலை வரை அதிக அளவாக பந்தலூரில் 19 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல, கிளன்மாா்கனில் 12 மி.மீ., சேரங்கோட்டில் 10 மி.மீ., அவலாஞ்சி, நடுவட்டத்தில் 7 மி.மீ., மேல்பவானியில் 6 மி.மீ., கூடலூரில் 5 மி.மீ., மேல்கூடலூா், பாடந்தொறை, கிண்ணக்கொரையில் 4 மி.மீ., செருமுள்ளி, தேவாலாவில் 3 மி.மீ., எமரால்டில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

உதகை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்திருந்ததோடு, காற்றும் குறைந்துள்ளதால் குளிரின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.