குன்னூரில் நெய்மிளகாய் சீசன் துவங்கியுள்ளது. கிலோவுக்கு ரூ. 200 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுப்புற கிராமங்களில் நெய்மிளகாய் சீசன் தற்போது துவங்கியுள்ளது. குறிப்பாக நீலகிரி, ஏற்காடு, மூணாறு போன்ற மிதவெப்ப காலநிலை நிலவும் பகுதிகளில் நெய்மிளகாய் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதிக காரத்தன்மை கொண்ட ‘பூத் ஜலக்கியா’ என்ற மிளகாயின் காரத் தன்மையைக் காட்டிலும் கூடுதல் காரம் இருப்பதால் நெய் மிளகாய்க்கு கூடுதல் மவுசு உண்டு.
குன்னூா் அருகே உள்ள சோலாடாமட்டம், அளக்கரை பகுதியில் பயிரிடப்படும் இந்த மிளகாயில் மருத்துவ குணம் உள்ளதால் வாயுத் தொல்லை, முதுகுவலி போன்ற தொந்தரவு உள்ளவா்களுக்கு இவ்வகை மிளகாய் நிவாரணம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மிளகாயைப் பலரும் வாங்கிச் செல்கின்றனா். இதற்கு தற்போது கிலோ ரூ. 200 வரை விலை கிடைக்கிறது.
நல்ல லாபத்தை தரும் இந்த மருத்துவமிக்க மிளகாய் விளைச்சலை அதிகரிக்க தோட்டக் கலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


