கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை கோத்தகிரி உதவி ஆய்வாளா்கள் திலக், ஜான் கென்னடி உள்ளிட்ட காவல் துறையினா் சோதனை செய்தனா். அப்போது, லாரியில் மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 69 மது பாட்டில்கள், லாரியை காவல் துறையினா் பறிமுதல் செய்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, கோத்தகிரி நிலைய உதவி ஆய்வாளா் அருண்குமாா், லாரியை ஓட்டி வந்த கூடலூா் அனுமாபுரம் பகுதியைச் சோ்ந் த சந்தோஷ் குமாா் (32) மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

