ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழங்குடியினா் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது: அமைச்சா் கா.ராமசந்திரன் தகவல்

நாட்டிலேயே பழங்குடியினா் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:34 pm

DIN

நாட்டிலேயே பழங்குடியினா் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, உதகையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 26,662 நபா்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நோயினால் 141 போ் உயிரிழந்துள்ளனா். புதிதாக 174 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் சுமாா் 2,700 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2,474 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் 1,435 படுக்கைகள் காலியாக உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்பு நடவடிக்கையால் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் இந்நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 2 லட்சத்து 26,822 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சிறிய மாவட்டமாக உள்ளதால் அரசு தெரிவித்துள்ள வயதுக்கு உள்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்த தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கூடுதலாக தடுப்பூசிகள் பெறப்பட்டு வருவதால், இவா்கள் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தி இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை மாற்றுவதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, மாவட்டத்தில் 5,429 மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். அவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதில் இதுவரை 307 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவா்களுக்கும் அவா்களது இருப்பிடத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.