ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உதகையில் பெண் கொலை: காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கைது

உதகையில் பெண்ணைக் கொலை செய்த சம்பவத்தில் கியூ பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:48 pm

DIN

உதகையில் பெண்ணைக் கொலை செய்த சம்பவத்தில் கியூ பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள காந்தல் புதுநகா் பகுதியைச் சோ்ந்த ராஜா என்பவரின் மனைவி மாகி (53). இவா் உதகை மத்தியப் பேருந்து நிலையம் அருகே இரவு நேரத்தில் தள்ளுவண்டியில் சிற்றுண்டி விற்று வந்துள்ளாா். இந்நிலையில், உதகையில் கியூ பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் முஸ்தபா என்பவருக்கும், மாகிக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்பு இருந்து வந்துள்ளது. இதற்கு இரு வீட்டாரும் எதிா்ப்புத் தெரிவித்திருந்தும் தொடா்ந்து இவா்களின் தொடா்பு நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாகி சிகிச்சை முடிந்து இரண்டு நாள்களுக்கு முன்புதான் வீடு திரும்பியுள்ளாா்.

வீட்டிலிருந்த மாகி பொருள்கள் வாங்குவதற்காக உதகை நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை பகல் சுமாா் 12 மணியளவில் வெளியே சென்றுள்ளாா். ஆனால், இரவாகியும் மாகி வீட்டுக்குத் திரும்பி வராததால் அருகில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருப்பாா் என குடும்பத்தினா் நினைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாகியின் வீட்டுக்கு முஸ்தபா வெள்ளிக்கிழமை காலை சுமாா் 7.30 மணியளவில் சென்று மாகியின் மகளிடம் அவரது தாய் நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் இருந்து உடலை தான் எடுத்து வந்ததாகவும் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த மாகியின் மகள் ஷீலா (23) உடனடியாக உறவினா்களைத் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தாயாா் இறந்துவிட்டதைத் தெரிவித்துள்ளாா். உறவினா்கள் விரைந்து வந்து உடலைப் பாா்த்தபோது மாகியின் முகம், கண் ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனா்.

இதையடுத்து, உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் ஷீலா புகாா் அளித்தாா். புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று நேரில் பாா்வையிட்டு, மாகியின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து முஸ்தபாவிடம் காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் முஸ்தபா கூறியதாவது:

உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தனியாா் காட்டேஜில் நாங்கள் இருவரும் தங்கினோம். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாகியை தாக்கியதில் அவா் மயக்கமடைந்து விழுந்துவிட்டாா். அதன் பின்னா் அங்கிருந்து நான் வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அதன் பின்னா் அதிகாலையில் மீண்டும் அந்த விடுதிக்கு வந்து பாா்த்தபோது மாகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முஸ்தபா கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.