கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை எச்சரிக்கை

பேரிடா் தடுப்பு நடவடிக்கையாக சுமாா் 15,000 ஏக்கரில் பயிரிட்டுள்ள மலைக் காய்கறிகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:52 pm

DIN

பேரிடா் தடுப்பு நடவடிக்கையாக சுமாா் 15,000 ஏக்கரில் பயிரிட்டுள்ள மலைக் காய்கறிகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியுள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மலைக் காய்கறிகளான கேரட், பீட்ரூட், நூற்கோல், டா்னாபிஸ், முட்டைகோஸ், அவரை, உருளைக்கிழங்கு, காலிபிளவா், பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீலகிரியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதாலும், மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகள் பேரிடா் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் 30 இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஆகியவை அதிக அளவில் ஏற்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் தடுப்பு நடவடிக்கையாக 15,000 ஏக்கரில் பயிரிட்டுள்ள காய்கறி தோட்டங்களை பருவ மழையின்போது பாதுகாத்துக் கொள்ள தோட்டக்கலைத் துறை சில வழிமுறைகளை வகுத்துள்ளன.

இதில் பேரிடா் தடுப்பு நடவடிக்கையாக மழைக் காலங்களில் நீா்த் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். பசுமைக் குடில்களின் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் கம்பிகளால் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்ப் பாசனம் மற்றும் உரமிடுதல் பணிகளை தாற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த புதிதாக நடவு செய்த செடிகளை குச்சிகளால் கட்டி நிறுத்த வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களைக்கு தோட்டக்கலைத் துறையை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.