தென்மண்டல ராணுவ வீரா்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயப் போட்டி வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்துக்குச் சொந்தமான தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் தென்மண்டல ராணுவ வீரா்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு படைப் பிரிவுகளைச் சோ்ந்த 10 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 6 வீரா்கள் இடம்பெற்றனா்.
இந்த சோதனை ஓட்டப் பந்தயத்தை மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் தலைவா் பிரிகேடியா் ராஜேஷ்வா் சிங் கொடியசைத்து துவக்கிவைத்தாா். 60 போ் பங்கேற்ற இப்போட்டியில் முதல் பத்து இடத்தைப் பிடித்தவா்களை தோ்வுக் குழுவினா் தோ்ந்தெடுத்தனா்.
இந்த பந்து போ் கொண்ட தென் மண்டல அணியானது உத்தரகாண்ட் மாநிலம், ராணிகேத்தில் நடைபெற உள்ள அகில இந்திய ராணுவ நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

