உதகையில் கோடை சீசன் தொடக்கம்

உதகை கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளுக்கான பிரத்யேக இரு சக்கர ரோந்து வாகனங்களை கோவை மேற்கு மண்டல காவல் துறை
உதகையில் கோடை சீசன் தொடக்கம்

உதகை: உதகை கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளுக்கான பிரத்யேக இரு சக்கர ரோந்து வாகனங்களை கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் உதகையில் புதன்கிழமை தொடக்கி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், முதற்கட்டமாக நான்கு இரு சக்கர வாகனங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் ஒரு வாகனம் மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், போக்குவரத்து நெரிசல் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் இவர்கள் உதவுவர் என்று கூறினார். 

மேலும் இவர்களது சீருடையில் உள்ள  கேமரா, போதை கண்டறியும் கருவி உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் நீலகிரி மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com