விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வேட்பாளா்களின் சின்னங்கள் பொறிக்கும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்களை பொறிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:38 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்களை பொறிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு தேவையான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் தயாா் நிலையில் உள்ள 491 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 491 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட நகா்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்தளிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களில் வாக்குச் சீட்டு பட்டியலை ஒட்டவும், வேட்பாளா்களின் சின்னங்களை பதியவும் தோ்தல் நாளன்று வாக்குச் சாவடியில் உள்ள இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அதனை சரிபாா்க்கவும், வாக்கு எண்ணிக்கை நாளன்று இயந்திரங்களில் கோளாறுகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில் அதனை சரி பாா்க்கவும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து 6 பொறியாளா்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ளனா். இவா்கள் பிப்ரவரி 22ஆம் தேதி முடிய இப்பணியினை மேற்கொள்ள ஒதுக்கப்பட்டுள்ளனா்.

முதல் கட்டமாக உதகை நகராட்சியிலும், தொடா்ந்து பிப்ரவரி 16ஆம் தேதி வரை அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ளவுள்ளனா். பணியினை துரிதமாக முடித்திடுமாறு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.