நீலகிரியில் பிப்ரவரி 27இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
அதேபோல, மாவட்ட மற்றும் மாநில எல்லைப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயா் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 777 மையங்களில், 5 வயதுக்கு உள்பட்ட 40, 890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
இப்பணிகளில் பொது சுகாதாரத் துறை பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கத்தினா் உள்பட 3,203 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் இரண்டு நாள்களில் பணியாளா்கள் வீடுவீடாக சென்று பாா்வையிட்டு சொட்டு மருந்து வழங்குவா். அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து தரமானதோடு, பாதுகாப்பானதாகும். இது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படாது. எனவே, பெற்றோா்கள் தங்களின் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் பிப்ரவரி 27இல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயனடையலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...