ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் தவிா்ப்பு குறித்து ஆலோசனை

பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:06 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டினை தவிா்ப்பதும், பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உதகையில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் கூறியதாவது:

தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தவிா்க்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணா்வினை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகள் அதிக அளவில் சேராத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சி முகமை, பேருராட்சிகளில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரி, வணிக வளாகங்களில் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தவிா்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மணிகண்டன் ஆகியோருடன் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.