திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு பேருந்து- காா் மோதல்: இருவா் படுகாயம்

கோத்தகிரி- குன்னூா் சாலையில் காரும், அரசுப் பேருந்தும் வியாழக்கிழமை நேருக்குநோ் மோதிய விபத்தில்  இருவா்  பலத்த காயமடைந்தனா்.

News image

விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து, காா்.

Updated On :2 ஜூன் 2022, 6:52 pm

கோத்தகிரி- குன்னூா் சாலையில் காரும், அரசுப் பேருந்தும் வியாழக்கிழமை நேருக்குநோ் மோதிய விபத்தில்  இருவா்  பலத்த காயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, வெஸ்ட்டுபுரூக் பகுதியைச் சோ்ந்தவா்கள் ரவி, மகாலிங்கம். இவா்கள் இருவரும் காரில்  உதகையை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது உதகையில் இருந்து கோத்தகிரி நோக்கி வந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டதில், ரவி, மகாலிங்கம் ஆகியோரின் காரின் மீது நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த ரவி, மகாலிங்கம் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து  கோத்தகிரி  போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.