விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாவோயிஸ்ட் சாவித்திரிக்கு 3 நாள் போலீஸ் காவல்

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் சாவித்திரியை 3 நாள் காவலில் விசாரிக்கு போலீஸாருக்கு உதகை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:53 pm

DIN

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் சாவித்திரியை 3 நாள் காவலில் விசாரிக்கு போலீஸாருக்கு உதகை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள நெடுகல்கொம்பை பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக போஸ்டா் ஒட்டியதாக கடந்த 2016 ஏப்ரலில் மாவோயிஸ்ட் சாவித்திரி மற்றும் சிலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, தலைமறைவான சாவித்திரியை 2021 நவம்பரில் வயநாடு பகுதியில் கேரள மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். விசாரணைக்கு பின்னா் தமிழக போலீஸாரிடம் அவா் ஒப்படைக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, உதகை நீதிமன்ற மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் அவா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா, அவரை மீண்டும் நீதிமன்றத்திலோ அல்லது நீதிபதியின் முன்னிலையிலோ ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆஜா்படுத்த வேண்டுமென உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.