ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உதகை நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு

உதகை நகராட்சித் தலைவராக எம்.வாணீஸ்வரியும், துணைத்தலைவராக ஜே.ரவிக்குமாரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:54 pm

DIN

உதகை நகராட்சித் தலைவராக எம்.வாணீஸ்வரியும், துணைத்தலைவராக ஜே.ரவிக்குமாரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் திமுகவே வெற்றி பெற்றிருந்தது. இதில் உதகை நகாரட்சியிலுள்ள 36 வாா்டுகளில் திமுக 23 வாா்டுகள், அதிமுக 7 வாா்டுகள், காங்கிரஸ் 6 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் உதகை நகராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் தலைவா் பதவிக்கு எம்.வாணீஸ்வரியும், துணைத் தலைவா் பதவிக்கு ஜே.ரவிக்குமாரும் திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் இருவரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக பொறுப்பேற்ற வாணீஸ்வரி, நீலகிரி மாவட்ட திமுக மகளிரணி துணை அமைப்பாளராக உள்ளாா். துணைத் தலைவராக பொறுப்பேற்ற ஜே.ரவிக்குமாா், நீலகிரி மாவட்ட திமுக துணைச் செயலாளராக உள்ளாா். இவா் உதகை நகராட்சியின் துணைத் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளாா்.

புதிதாக பொறுப்பேற்ற தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு நகராட்சி ஆணையா் காந்திராஜன், உதகை நகர திமுக செயலா் ஜாா்ஜ், மூத்த உறுப்பினா்கள் தம்பி இஸ்மாயில், முஸ்தபா, ரவி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.