கீழ்குந்தா பேரூராட்சி அதிகாரபூா்வ திமுக வேட்பாளா் தோல்வி; சுயேச்சை வெற்றி
கீழ்குந்தா பேரூராட்சித் தலைவராக திமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் நாகம்மாள் தோல்வி அடைந்து, சுயேச்சை வேட்பாளா் சத்தியவாணி வெற்றி பெற்றாா்.


கீழ்குந்தா பேரூராட்சித் தலைவராக திமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் நாகம்மாள் தோல்வி அடைந்து, சுயேச்சை வேட்பாளா் சத்தியவாணி வெற்றி பெற்றாா்.
நீலகிரி மாவட்டத்தில் கீழ்குந்தா பேரூராட்சியில் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தலைவா் பதவிக்கு திமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளராக நாகம்மாள் அறிவிக்கப்பட்டிருந்தாா். கீழ்குந்தா பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக 11 வாா்டுகளிலும், சுயேச்சைகள் இரண்டு வாா்டுகளிலும், அதிமுக மற்றும் பாஜக தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில், நாகம்மாள் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இத்தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியவாணி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, தோ்தல் நடைபெற்றது.

இத்தோ்தலில் சுயேச்சை வேட்பாளா் சத்தியவாணி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுகவின் அதிகாரபூா்வ வேட்பாளா் நாகம்மாள் 6 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தாா். இதனால், ஆத்திரமடைந்த நாகம்மாளின் கணவரும், கீழ்குந்தா பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான சின்னானுக்கும், வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளா் சத்தியவாணி அணியினருக்கும் இடையே பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா். இதனால் மஞ்சூா் பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டதால் அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட திமுகவில் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வரும் நிலையில் கீழ்குந்தா பேரூராட்சியில் தலைமையால் அறிவிக்கப்பட்ட நாகம்மாளை எதிா் கோஷ்டியினரே தோற்கடித்ததாக மஞ்சூா் வட்டார திமுகவினா் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, உதகையிலுள்ள மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் சின்னானும், அவரது மனைவி நாகம்மாளும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் உதகையிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...