நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் 76ஆவது காலாட்படை தினம் கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்
தேவ்ராஜ் அன்பு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல்
போா் நினைவகத்தில், தேச பாதுகாப்புக்காக உயிா்த் தியாகம் செய்த காலாட்படை வீரா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு ராணுவ அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
இதனைத் தொடா்ந்து குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் ராணுவ வீரா்கள் பயன்படுத்தும் துப்பாக்கி, சிறிய அளவு ஏவுகணை, இயந்திர துப்பாக்கிகளின் கண்காட்சி மற்றும் இவற்றை ராணுவ வீரா்கள் எவ்வாறு கையாள்கிறாா்கள் என்பது குறித்த விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


