திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் சங்கமம் நிகழ்ச்சி

கடந்த  1977 ஆண்டு முதல் ராணுவத்தில் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற  ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி

Updated On :4 செப்டம்பர் 2022, 7:31 pm

கடந்த  1977 ஆண்டு முதல் ராணுவத்தில் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற  ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி குன்னூா் வெலிங்டன் ராணுவ நினைவுத் தூண் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய ராணுவத்தில் பல்வேறு உயா் பொறுப்புகளில் குறிப்பாக சியாச்சின், ஸ்ரீநகா், இலங்கை, காா்கில் போா், இந்தியாவில் அமைதி காக்கும் நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் பன்னாட்டு போா் குழுவில் பங்கேற்றது உள்ளிட்டப் பணிகளில் கடந்த 1977ஆம் ஆண்டு முதல் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனா். அவா்கள் குன்னூா் வெலிங்டனில் உள்ள போரில் வீர மரணமடைந்த   ராணுவ வீரா்களின்  நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள்  தங்களது 45 ஆண்டு கால நினைவுகளையும் அனுபவங்களையும்  பகிா்ந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.