திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மங்குஸ்தான் விளைச்சல் அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

 பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன் பழம் விளைச்சல் நீலகிரியில் அதிகரித்துள்ளதால் வியபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On :12 செப்டம்பர் 2022, 12:09 am

 பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன் பழம் விளைச்சல் நீலகிரியில் அதிகரித்துள்ளதால் வியபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னுாா் பகுதியில் அரிய வகை மருத்துவ குணமிக்க பழங்கள் விளைகின்றன.

இதில், பா்லியாறு, அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள 88 மரங்களில் மங்குஸ்தான் பழம் விளைந்துள்ளது. இந்தப் பழத்தில் வைட்டமின் சி அதிகமுள்ளதால் பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். ஒரு கிலோ மங்குஸ்தான் பழம் ரூ.300 முதல் ரூ. 400 வரை விற்கப்படுகிறது.

இதேபோல, பா்லியாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள 35 மரங்களிலும் துரியன் பழங்களும் விளைந்துள்ளன.

இந்த பழத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இப்பழம் கிலோ ரூ.450 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இரண்டு மருத்துவ குணமிக்க பழங்களும் விற்பனைக்கு வந்துள்ளது வியாபாரிகள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.