சேரம்பாடியில் வீடுகளை சேதப்படுத்தி வரும் யனைகளைக் கண்காணிக்க கும்கிகள் வரவழைப்பு: ஆட்சியா் தகவல்
பந்தலூரை அடுத்த சேரம்பாடியில் வீடுகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளைக் கண்காணிக்க 2 கும்கிகளுடன் 75 பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.


பந்தலூரை அடுத்த சேரம்பாடியில் வீடுகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளைக் கண்காணிக்க 2 கும்கிகளுடன் 75 பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்துக்குள்பட்ட சேரம்பாடி பகுதியில் வீடுகளையும், வேளாண் பயிா்களையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளைப் பிடிக்கக் கோரி பொதுமக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், காட்டு யானைகளைப் பிடிப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கிருஷ்ணா, ஸ்ரீனிவாஸ் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

முதுமலையில் இருந்து சேரம்பாடிக்கு வரவழைக்கப்பட்டுள்ள கும்கி யானை.
உதவி வனப் பாதுகாலா் கருப்பையா தலைமையில் கூடலூா் கோட்டத்திலுள்ள முன்கள பணியாளா்கள், அதிவிரைவுப் படையினா், யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் காவலா்கள், வேட்டைத் தடுப்பு காவலா்கள் உள்பட 75 பணியாளா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதேபோல, யானை நடமாட்டத்தைக் கண்காணிக்க சிறப்பு பயிற்சி பெற்ற காவலா்களும் முதுமலையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனா்.

சேரம்பாடி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள வனப் பணியாளா்கள்.
இந்தப் பணியை கண்காணித்து தீா்வு காண கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவா் கலைவாணன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை கூடலூருக்கு அனுப்பிவைக்க வனத் துறை தலைமை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...